சுடச்சுட

    

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஆகஸ்ட் 2,3,4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டை ஒட்டி காஞ்சிபுரம் அந்திரசன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காஞ்சிபுரம் கிளை சார்பில்  நடந்தது.

     பள்ளி தலைமை ஆசிரியர் எடின்பரோ தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தார்.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் தே.குமார், ஒரிகாமி என்னும் தலைப்பில் காகிதக் கலை உட்பட பல்வேறு செயல்முறை விளக்கங்களை மாணவர்களிடையே செய்து காண்பித்தார்.

     நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மூலம் அறிவியல் சிந்தனையை தூண்டும் அளவில் வடிவமைக்கப்பட்டு இருந்த செய்முறை விளக்கக் கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அறிவியலின் தாக்கம் என்ற தலைப்பில் விநாடி-வினா நடத்தப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai