Enable Javscript for better performance
டயர் கழிவுகள் எரிப்பு: மூச்சுத்திணறலால் 4 கிராம மக்கள் தவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    டயர் கழிவுகள் எரிப்பு: மூச்சுத்திணறலால் 4 கிராம மக்கள் தவிப்பு

    By ஸ்ரீபெரும்புதூர்,  |   Published on : 30th July 2013 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலைப்பட்டு ஏரியில் டயர் கழிவுப்பொருள்களை கொட்டி எரிப்பதால் வெளியேறும் கரும்புகையால் கொளத்தூர், நாவலூர், மேட்டுக்கொளத்தூர், மலைப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

      காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் பிரபலமான தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் டயர் உள்ளிட்ட கழிவுபொருள்கள் தொழிற்சாலைக்கு எதிரே உள்ள மலைப்பட்டு ஏரியின் ஒரு பகுதியில் கொட்டப்படுகின்றன. அவற்றுக்கு இரவு நேரங்களில் தீவைக்கப்படுகிறது. இதனால் உருவாகும் நச்சுத்தன்மை வாய்ந்த கரும்புகை காற்றில் கலந்து விடுகிறது. இதனால் மலைப்பட்டு ஏரியை சுற்றியுள்ள மலைப்பட்டு, கொளத்தூர், நாவலூர், மேட்டுக்கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளால் கடந்த சில நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த நச்சுப்புகையால் தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டு சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

      இதுதவிர மலைப்பட்டு ஏரி நீரை பயன்படுத்தி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தற்போது மலைப்பட்டு, சேத்துப்பட்டு பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. டயர் கழிவுப்பொருள்களை மலைப்பட்டு ஏரியில் கொட்டி வருவதால் ஏரி நீரும் மாசுப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதோடு விவசாயமும் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai