சுடச்சுட

    

    பி.எஸ்.என்.எல். சேவை முடக்கம்: வாடிக்கையாளர்கள் அவதி

    By காஞ்சிபுரம்,  |   Published on : 30th July 2013 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பகல் முழுவதும் பி.எஸ்.என்.எல். சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    காஞ்சிபுரத்தில் பெரும்பாலானோர் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை பெற்றுள்ளனர். குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் பி.எஸ்.என்.எல். இணையதள சேவை அதிகமாக உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்தரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் பகல் முழுவதும் பி.எஸ்.என்.எல். சேவை முடங்கியது. அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்குப் பிறகு நிலைமை சரிசெய்யப்பட்டது.

    இதற்கிடையில் திங்கள்கிழமை (ஜூலை 29) காலை முதல் இணையதள சேவை முற்றிலுமாக முடங்கியது.

    இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் பணி நடைபெறாமல் முடங்கியது. 

    இது குறித்து காஞ்சிபுரம் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் கேட்டபோது, "சென்னையில் ஏற்பட்ட சர்வர் கோளாறால் இணையதள சேவை பாதிப்படைந்தது. சென்னையில்தான் அப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியும்' என்றார்.

    இதற்கிடையில் மாலை 6 மணிக்குப் பிறகு இணையதள சேவை சரி செய்யப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai