சுடச்சுட

  

  பெண் உறுப்பினர்களின் கணவர்களுக்கு அனுமதி இல்லை

  By காஞ்சிபுரம்  |   Published on : 30th July 2013 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்களின் கணவர்களுக்கு அனுமதி இல்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி செயலர் செல்வராணி தெரிவித்தார்.

   காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் சாதாரணக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஊராட்சிச் செயலர் செல்வராணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

   கூட்டத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வழிவகை செய்தது, டெல்டா மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக மீத்தேன் வாயு கொண்டு செல்லும் திட்டத்தை அனுமதிக்க மறுத்தது, மேட்டூர் அணையை திறக்க உத்தரவிட்டது உள்ளிட்டவற்றுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   மேலும் இக்கூட்டத்தில், 2013 ஜூன், ஜூலை மாதத்துக்கான மாவட்ட ஊராட்சி நிர்வாக கணக்கு செலவினங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

  இதைத் தொடர்ந்து, தலைவர் பேசியது: உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், பிரச்சனை குறித்து தகவல் கொடுத்தால் ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலை வசதி உள்ளிட்ட தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்தும் தெரிவிக்கலாம் என்றார்.

   ஊராட்சி செயலர் செல்வராணி பேசுகையில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை உத்தரவுப்படி ஊராட்சி குழுக் கூட்டத்தில் பெண் உறுப்பினர்களின் கணவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. அப்போதுதான் பெண் உறுப்பினர்கள் மன்றத்தில் திறமையாக செயல்பட முடியும், எதையும் தனியாக சந்திக்க முடியும் என்பதற்காக மத்திய ஊரக வளர்ச்சித் துறை இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது என்றார்.

   மாவட்ட ஊராட்சிக்குழு 27-வது வார்டு உறுப்பினர் மேகலாவின் கணவர் ரகுநாதன்: இது ஒன்றும் புதிதல்ல. எல்லா இடங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. நாங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளோமே தவிர, கூட்ட செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது எங்களை கலந்து கொள்ளக் கூடாது என்று ஏன் கூற வேண்டும் என்றார்.

   அப்போது குறுக்கிட்ட தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், அவரிடம் உரிய விளக்கங்களைக் கூறி சமாதானம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக்குழுவில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் போக, மொத்தம் 25 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 10 பேர் பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai