Enable Javscript for better performance
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

    By காஞ்சிபுரம்  |   Published on : 30th July 2013 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான 2013 - 14-ம் ஆண்டுக்கான, கண் பார்வையற்ற, மனவளர்ச்சி குன்றிய மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 பள்ளிகளில் இருந்து 29 மாணவிகள் உள்பட 86 பேர் கலந்துகொண்டனர்.

    இறகு பந்து, டேபிள் டென்னிஸ், கைப்பந்து, எறிபந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை ஆட்சியர் லி. சித்ரசேனன் தொடக்கி வைத்தார். இதில் காஞ்சிபுரம்  எம்.எல்.ஏ. சோமசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் தங்கநாயகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai