Enable Javscript for better performance
இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தனியார் தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இருவரை ஒரகடம் போலீஸார் தேடிவருகின்றனர்.

    ஒரகடம் அடுத்த வல்லம் கிராமத்தில் கார் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இத்தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு ரூ 6000 மதிப்புள்ள இரும்பு கம்பிகள் திருடிய வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மணி (20), முரளி (20), அஜித் (20), ஓசுரான் (19), கோகுல் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒரகடம் போலீஸார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய வல்லம் கிராமத்தைச் சேர்ந்த முத்து, துரை ஆகிய இருவரை ஒரகடம் போலீஸார் தேடிவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai