Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

    செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனைத்து வகை ரத்த இருப்புகள் தேவைப்பட்டன.

         தேவையைப் பூர்த்தி செய்ய மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்ததான முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

     இதில் காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி ஸ்ரீ காஞ்சி கிருஷ்ணா கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர்.

      செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக் குழுவினர் வருகை தந்து மாணவர்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர். மொத்தம் 52 யூனிட் ரத்தம் பெறப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    முகாமில் கல்லூரி முதல்வர் வெங்கடேசன், திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சண்முகவள்ளி, டாக்டர் சிவராம் திலகர் மற்றும் சுகாதார நிலையப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai