சுடச்சுட

  

  தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 100 பேர் கைது

  By காஞ்சிபுரம்,  |   Published on : 31st July 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரத்தில் திமுக தொழிற்சங்கம், சிஐடியு., ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே தொழிலாளர் நல அலுவலகம் முன்பு திமுக தொழிற்சங்கம், சிஐடியு., ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக தொழிற்சங்கத் தலைவர் பொன்னுராம், சிஐடியு தலைவர் முத்துக்குமார், ஏஐடியுசி தலைவர் ஜஹாங்கீர், ஏஐசிசிடியு தலைவர் இரணியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். முறைசாரா தொழிலாளர் நலவாரிய பயன்களை பெற்றிட தொழிலாளர்கள் நேரில் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. நலவாரிய பயன்களை பெற விஏஓ சான்று, வங்கி கணக்கு என்று தொழிலாளர்களை அலைக்கழிக்க கூடாது. ஓய்வூதியம், கல்விக்கடன், இறப்பு நிதி, விபத்து நிதி உள்ளிட்ட வாரிய பயன்களை காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் நல அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் முற்றுகை போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai