சுடச்சுட

    

    பணத்துக்காக பாட்டி, தாத்தாவை கட்டிப்போட்டு தாக்கிய பேரன்

    By காஞ்சிபுரம்  |   Published on : 31st July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில், பணத்துக்காக பாட்டி, தாத்தாவை கட்டிப்போட்டு தாக்கி, கத்தியால் வெட்டிய பேரனை போலீஸார் தேடி வருகின்றனர்.

     காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே காந்திநகர் 3-வது தெருவில் வசிப்பவர் சீனிவாசன் (77). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி ரமணி (68). இவர்களது மகள் சொர்ணலதா. இவர் இறந்துவிட்டார். இவரது கணவர் இளங்கோவன். ஆட்டோ ஓட்டுநர். இவர்களுக்கு பார்த்திபன் (23) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பார்த்திபன் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்தவர். இவர் பணம் கேட்டு அடிக்கடி தாத்தா, பாட்டியிடம் தகராறு செய்வாராம்.

     இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சீனிவாசனும், ரமணியும் வீட்டில் தனியாக இருந்த போது, முகமூடி அணிந்த ஒரு நபர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், சீனிவாசனின் கழுத்திலும், ரமணியின் முகத்திலும் கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் அவர்களை துணியால் கட்டிப் போட்டு தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

     முதிய தம்பதியின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்து வீட்டார், அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

    தனது பேரன் பார்த்திபன் மூகமூடி அணிந்து வந்து தாக்கியதாக முதிய தம்பதி சீனிவாசன், ரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai