சுடச்சுட

  

  காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக மாவட்ட திட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் த. கோடீஸ்வரிக்கு செவ்வாய்க்கிழமை பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

  இவர் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறையில் அலுவலகப் பணியாளராக பணியில் சேர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் கல்வி இயக்கக இருக்கை கண்காணிப்பாளராகவும், கடந்த 6 மாதங்களாக இயக்ககத்தின் மாவட்ட திட்ட அலுவலகக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் புதன்கிழமை பணி நிறைவு பெறுகிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு செவ்வாய்க்கிழமை பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. உதவி திட்ட அலுவலர் அன்பரசு தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பாராட்டினர். கண்காணிப்பாளர் கோடீஸ்வரி ஏற்புரை வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai