சுடச்சுட

    

    விவசாய நிலத்துக்கு சென்றுவர சாலை வசதி கேட்டு மனு

    By காஞ்சிபுரம்  |   Published on : 31st July 2013 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்றத்தூர் ஒன்றியம் கரசங்காலில் விவசாய நிலத்துக்குள் மாட்டு வண்டி மற்றும் வாகனங்கள் சென்று வர சாலை வசதி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சித் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் சித்ரசேனனிடம் அளித்த கோரிக்கை மனு: குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் ஊராட்சியில் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு மாட்டு வண்டி, வாகனங்களில் சென்று வர சாலை வசதியில்லை. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை வெளியில் கொண்டு வர முடியவில்லை. அரை கி.மீ. தூரத்துக்கு தலையில் சுமந்து பொருட்களை கொண்டுவரவேண்டிய நிலை உள்ளது.

    இதுதொடர்பாக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டோம். வயல்வெளியில் சாலை அமைத்தால் நீர்நிலை பாதிக்கும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீர்நிலையை கடக்கும் பகுதியில் கல்வெட்டு பாலம் அமைத்து சாலை போட உள்ளோம். எனவே, விவசாய நிலத்துக்குள் மாட்டு வண்டி, வாகனங்கள் சென்று வர சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai