ம.பொ.சி.யின் 109-வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆந்திர மாநிலத்தில் இணையவிருந்த திருத்தணியை தமிழகத்துடன் இணைத்த பெருமை ம.பொ.சிவஞானத்தையே சாரும்.
இவர் அனைவராலும் ம.பொ.சி. என அழைக்கப்பட்டார்.
இவரது 109-வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம், காந்திசாலை காமராஜர் சிலை அருகே கொண்டாடப்பட்டது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, காஞ்சிபுரம் வட்டார ஐக்கிய நாடார் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த விழா கொண்டாடப்பட்டது. பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் ஏ.வெள்ளைச்சாமி தலைமை வகித்து ம.பொ.சி.யின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் அமரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.