உத்தரமேரூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடந்தது.
முன்னாள் தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கி வரவேற்றார். எஸ்.சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார்.
ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் தலைவராக எஸ்.சம்பத், செயலராக செல்வகுமார், பொருளராக தன்ராஜ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட சங்க கவர்னர் (தேர்வு) ஐ.எஸ்.ஏ.கே.நாசர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கி ரோட்டரி சங்க செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
பள்ளிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.