அச்சிறுப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட மொறப்பாக்கத்தில் கிராம குடிநீர் சுகாதார குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மொறப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியவதி இளங்கோ தலைமை வகித்தார். துணைத் தலைவர் இராம. கண்ணியப்பன் வரவேற்றார். உதவி நிர்வாகப் பொறியாளர் நூருல்லா, உதவிப் பொறியாளர் விசாகம் ஆகியோர் குடிநீர் பரிசோதனை, மழைநீர் சேகரிப்பு ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வித்யா தொண்டு நிறுவனத்தின் செயலர் டி.கே.சடகோபன் செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், குடிநீர் ஆபரேட்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.