காஞ்சிபுரம் மாவட்ட ஓய்வூதியர்கள் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் வருமான வரி நிரந்தரக் கணக்கீட்டு எண் (பான் கார்டு) சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்ட கருவூலங்கள் வழியாக குடிமை ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கு 2014-2015-ஆம் ஆண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும்.
எனவே ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் உத்தேச வருமான வரி கணக்கீட்டுத் தாளுடன், வருமான வரி நிரந்தரக் கணக்கீட்டு எண் (பான் கார்டு), தொலைபேசி எண், பிறந்தநாள், வங்கிப் பெயர், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் கருவூலங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
வருமான வரி நிரந்தரக் கணக்கீடு எண் இல்லா குடிமை ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.