Enable Javscript for better performance
அண்ணா நினைவுத் தூணுக்கு அழகிரி மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக சென்ற மு.க.அழகிரி காஞ்சிபுரம் எல்லையில் உள்ள அண்ணா நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டார்.

    இந்நிலையில் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மு.க. அழகிரி, அங்கிருந்து கார் மூலம் ஆரணிக்கு புறப்பட்டார்.

    ஆரணி செல்லும் வழியில் காஞ்சிபுரம் எல்லையான பொன்னேரிக்கரைப் பகுதியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஆரணி புறப்பட்டுச் சென்றார்.

    முன்னதாக, மு.க. அழகிரி அண்ணா நினைவு இல்லத்துக்கு வருவதாக தகவல் பரவியது. இதனால் அண்ணா நினைவு இல்லம் அருகே பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள் குவிந்தனர்.

    ஒரு மணி நேரம் காத்திருந்த நிருபர்கள் திரும்பிச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai