Enable Javscript for better performance
அனேகதங்காவதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அனேகதங்காவதேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை சிறப்புடன் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் தெருவில் பல்லவர்கள் காலத்துக்கு முன்பாக கட்டப்பட்ட சிவ தலங்களில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ அனேகதங்காவதேஸ்வரர் கோயிலாகும்.

    இக்கோயிலை முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.

    அனேகதங்காவதேஸ்வர் என்ற பெயர் கொண்ட சிவ தலம் நாட்டில் 2 இடங்களில் மட்டுமே உள்ளது. ஒன்று இமயமலையில் கெüரிக்குண்டம் அருகிலும், மற்றொன்று காஞ்சிபுரத்தில் இருப்பதும் சிறப்பு.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இத்திருத்தலத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த மார்ச் 22-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    23-ஆம் தேதி நவகிரக ஹோமம் மற்றும் முதலாம் காலயாக சாலை பூஜைகள் நடைபெற்றன. 24-ஆம் தேதி காலை 2-ஆம் காலயாக சாலை பூஜைகளும், மாலையில் 3-ஆம் காலயாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. மார்ச் 25-ஆம் தேதி 5-ஆம் கால யாகசாலை பூஜைகள் சிறப்புடன் நடைபெற்றன.  புதன்கிழமை (மார்ச் 26) காலை 7 மணிக்கு விசேஷசந்தி, அவப்ருதயாகம், திருவ்யாஹுதி ஆகியவற்றைத் தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து கும்ப யாத்ராதானம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் காலை 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 10.45 மணிக்கு மஹாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai