Enable Javscript for better performance
இந்தியன் வங்கி சார்பில் இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் தொழில் முனைவோருக்கு இலவச சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இது குறித்து இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இதில் தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி, மொபைல் போன் பழுது நீக்குதல், காளான் வளர்த்தல், வாடகை வாகன ஓட்டுநர் ஆகிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

    மேலும் மாட்டுப் பண்ணை, மாடு வளர்ப்பு மற்றும் மண்புழு இயற்கை உரம் தயாரித்தல், மாட்டுப்பண்ணை மேலாண்மை, பட்டு வளர்ப்பு, கோழிப்பண்ணை, பன்றி, ஆடு, தேனீ வளர்ப்பு, நாற்றங்கால் மேலாண்மை, காளான், பூச்செடி, பழமரம் வளர்ப்பு, மோட்டார் ரிவைண்டிங், பம்ப் செட் பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள், குளிர்பதன சாதனம், இருசக்கர வாகனம், செல்போன், இன்வெர்டர் யு.பி.எஸ். பழுதுநீக்கம், இலகுரக வாக ன ஓட்டுநர் பயிற்சி, கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் பப்ளிகேஷன் (டி.டி.பி.), ஆண், பெண் அழகுகலைப் பயிற்சி, பிளம்பிங் சானிட்டரி ஒர்க்ஸ், அடிப்படை புகைப்படம் மற்றும் விடியோ கேமிரா படம் எடுத்தல், தையல் இயந்திரம் பழுதுநீக்கல், அலுமினியம் பேப்ரிகேஷன்ஸ், எம்ப்ராய்டரி, பேப்ரிக் பெயிண்டிங், உணவு பொருள்கள் மற்றும் பேக்கரி, வீட்டு உபயோக பொருள் தயாரித்தல், ஆண், பெண் தையல் பயிற்சி, அகர்பத்தி, சணல் பொருள், பேப்பர் கவர் பை, பைல் கைவினை பொருள் தயாரித்தல், ப்ளக்ஸ் போர்டு லாமினேஷன், கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

    சுயதொழில் தொடங்க தேவையான திறன்களும் கற்றுத் தரப்படுகிறது. கல்வித் தகுதி எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.

    18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இப்பயிற்சிகள் முற்றிலும் இலவசம். இலவச உணவும் வழங்கப்படுகிறது.

    விருப்பமுள்ளவர்கள் இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம், 685, முதல் குறுக்குத் தெரு, அரசு நகர், கீழ்ரோடு, காஞ்சிபுரம் என்ற முகவரியிலோ 044 - 2723 8077 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai