Enable Javscript for better performance
கருத்தரங்கம் - நூல் வெளியீட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரத்தில் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சரித்திரத் தேர்ச்சிக் கொள் என்னும் நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத் தலைவர் அண்ணாத்துரை வரவேற்றார். விழாவை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சக்தி கமலம்மாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பட்டு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஒய்.எம்.நாராயணசாமி கலைமை தாங்கினார். சரித்திரத் தேர்ச்சிக் கொள் என்னும் புத்தகத்தை பேராசிரியர் ரத்தினம் வெளியிட தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்க பொதுச்செயலர் ஜெயபாஸ்கரன் பெற்றுக் கொண்டார்.

    "தமிழக வரலாற்றில் காஞ்சிபுரத்தின் பங்கு' என்ற தலைப்பில் வரலாற்று ஆராயச்சியாளர் பத்மாவதி சிறப்புரை நிகழ்த்தினார். "வரலாற்றில் தென்னிந்திய ஓவிய பாணியும், காஞ்சிபுரம் கோயில் ஓவியங்களும்' என்ற தலைப்பில் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்துரு சிறப்புரை ஆற்றினார். காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன், பச்சையப்பன் ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் சு.காளிராஜ், எழுத்தாளர் எம்.கே.சுப்பிரமணியன், நாவலாசிரியர் பாலச்சந்திரன், கலைமாமணி கரந்தை தாமோதரன், காஞ்சி வரலாற்று விழிப்புணர்ச்சி மையத்தின் வி.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நரசிம்மபல்லவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் வரலாற்று உணர்வைச் சிறுவர் சிறுமியருக்கு ஏற்படுத்தும் நோக்கில் பாரதியின் சரித்திரத் தேர்ச்சிக் கொள் எனும் வாக்கினையே தலைப்பாகக் கொண்டு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மாணவர்கள் பார்த்து வரைந்த சரித்திரச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai