Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரபல ரவுடி ஒருவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரத்தை அடுத்த ராஜகுளம் பகுதியைச் சேர்ந்தவர் லோகு (28).

    பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மக்களவைத் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள், கொலை, கொள்ளையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் லோகுவை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி.விஜயகுமாருக்கு சிவகாஞ்சி போலீஸார் பரிந்துரை செய்தனர்.

    அதன் அடிப்படையில் லோகுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க எஸ்.பி. விஜயகுமார் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார்.

    இப்பரிந்துரையை ஏற்ற ஆட்சியர் கா. பாஸ்கரன் லோகுவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத் தொர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் லோகுவை ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai