Enable Javscript for better performance
தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படை வருகை- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு 1 கம்பெனி துணை ராணுவப் படையினர் காஞ்சிபுரம் வந்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளும் காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தின்கீழ் வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைக்குள்பட்ட பகுதிகள் தவிர மற்ற 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும் சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டில் வருகின்றன.

    காஞ்சிபுரம் காவல் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்கு 3 துணை  ராணுவப் படை வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக 1 கம்பெனி துணை ராணுவப் படையினர் காஞ்சிபுரம் வந்தனர். இந்தப் படையில் 1 டி.எஸ்.பி., 1 இன்ஸ்பெக்டர், 3 சப்-இன்ஸ்பெக்டர், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மொத்தம் 91 பேர் இருப்பர். இந்த துணை ராணுவப் படையினர் செவ்வாய்க்கிழமை முதல் பறக்கும் படையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை என மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 2 கம்பெனி துணை ராணுவப் படைவீரர்கள் விரைவில் வர உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai