Enable Javscript for better performance
பிரதமராக மோடி முடிசூட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: மல்லை சத்யா- Dinamani

சுடச்சுட

    

    பிரதமராக மோடி முடிசூட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: மல்லை சத்யா

    Published on : 27th March 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரத பிரதமராக மோடி முடிசூட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு காஞ்சிபுரம் தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா கேட்டுக் கொண்டார்.

     தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பாக காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி மதிமுக கட்சியின் சார்பில் மல்லை சத்யாவை ஆதரித்து தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

    மதிமுக மாவட்டச் செயலர் பாலவாக்கம் சோமு வரவேற்றார். பாமக துணை பொதுச் செயலர் பொன்கங்காதரன் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலர் குமரவேல், தேமுதிக மாவட்டச் செயலர் ரமேஷ் பிரபாகரன், பாஜக மாவட்டச் செயலர் பலராமன், தேமுதிக மாவட்டப் பொருளர் வழக்குரைஞர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், மதிமுக வேட்பாளர் மல்லை சத்தியா பேசியது: இன்னும் 30 நாள்களே உள்ளன. நீங்கள் வாக்களிக்கும் நாள் ஏப்ரல் 24. உறக்கம் காணாமல், வெற்றி கனியைப் பறிக்க பல தூரம் உழைக்க வேண்டி உள்ளது. நம் தோழர்கள் 3 மணி நேரமே தூங்கிக் கொண்டு, பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை, மே மாதம் மாபெரும் அதிசயம் நிகழ உள்ளது. இங்கே அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை வீழத்துகிற நிலை உள்ளது. குஜராத் முதல்வராக உள்ள மோடியை இத்தேர்தலின் மூலம், நாட்டுக்குத் தலைமை தாங்கி நடத்த, பிரதமராக முடிசூடி கொள்ள, பம்பரம் சின்னத்துக்கு வாக்களியுங்கள். தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு, ரயில்களை இயக்கவும், சென்னை துறைமுகத்திலிருந்து தாம்பரம் வரை செல்கிற மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வழியாக மேல்மருவத்தூர் வரை இயக்கவும் வழிவகை செய்வேன் என்றார் சத்யா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai