Enable Javscript for better performance
மின்னணு வாக்குப் பதிவு: மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப் பதிவு செய்வது குறித்த செயல்முறை விளக்கத்தை மத்திய தேர்தல் பார்வையாளர் ஆய்வு நடத்தினார்.

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நோட்டா பொத்தானை எவ்வாறு இயக்குவது? வாக்குப் பதிவு எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்த பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியை மத்திய தேர்தல் பணிக் குழு பார்வையாளர் நகுபாஷிம் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவருடன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தேர்தல் அலுவலர் சம்பத்குமார், துணைத் தேர்தல் அலுவலர் பார்த்திபன், ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai