Enable Javscript for better performance
வேறு இடத்துக்கு மாற்றக் கோரி டாஸ்மாக் கடை முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளூர் சாலையில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை மாற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் டாஸ்மாக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளூர் சாலையில் ஏரிக்கரைப் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இக் கடையில் மது அருந்தும் குடிமகன்கள் இப்பகுதி வழியாக செல்லும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும், ஏரியில் தனியாக துணி துவைக்கும் பெண்களை கிண்டல் செய்வதும், மதுஅருந்தும் வடமாநிலத்தவர்கள் இப்பகுதியில் நாகரிகமற்ற நிலையில் நடந்துக் கொள்வதாகவும், இதனால் இப்பகுதியில் பெண்கள் தனியாக செல்ல முடிவதில்லை. எனவே இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த வன்னியர் தெரு, சின்னக்கடை தெரு, ஏரிக்கரைப் பகுதியில் வசிக்கும் 20 பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர்,  டாஸ்மாக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai