Enable Javscript for better performance
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 54,910 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 54,910 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 28,097 பேர், மாணவிகள் 26,813 பேர் என மொத்தம் 54,910 மாணவர்கள் எழுதினர்.

    இவர்கள் தவிர 2,940 மாணவ, மாணவிகள் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டனர். மாவட்டத்தில் மொத்தம் 143 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    தேர்வு நேரங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு கல்வி அதிகாரிகள் தலைமையில் 143 பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு வரை காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு இந்த ஆண்டு காலை 9 மணிக்கு தொடங்கியது.

    மாணவர்கள் விடைத் தாள்களை பூர்த்தி செய்யவும், கேள்வித் தாள்களை படித்து பார்ப்பதற்கென காலை 9.15 மணி வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

    தேர்வுக் கண்காணிப்பாளர்கள் காலை 8 மணிக்கே அழைக்கப்பட்டிருந்தனர். மாணவர்களும் காலை 7 மணி முதலே தேர்வு நடைபெறும் மையங்களில் குவியத் தொடங்கினர். மாவட்டம் முழுவதும் முதல்நாள் தேர்வு அமைதியாக நடந்த முடிந்தது. முன்னதாக செவ்வாய்க்கிழமை முடிவடைந்த பிளஸ் 2 தேர்வும் எந்தவிதப் பிரச்னையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது.

    செங்கல்பட்டில்...

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக 93 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, 186 தேர்வுக் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பில் 19,335 மாணவர்களும், 18,713 மாணவிகளும், 1300 தனித்தேர்வு எழுதிய மாணவர்கள், 32 மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்ல ஆசிரியர்கள் எழுதியது என மொத்தம் 39,370 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதாக செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலர் வேதாச்சலம் தெரிவித்தார். கோட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். முதல் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ, மாணவிகளை கேட்கும்போது கேள்வித்தாள் எளிதாக இருந்ததால் நன்றாக எழுதியதாக தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai