Enable Javscript for better performance
காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் செவிலிமேட்டில் குடிநீர் வராததைக் கண்டித்து, அப்பகுதிப் பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் செவிலிமேட்டில் ரோட்டு தெரு, காமராஜர் வீதி, பாட்டை தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை செவிலிமேடு முக்கியச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த காஞ்சிபுரம் வட்ட காவல் ஆய்வாளர் சாரதி, நகராட்சி ஆணையர் சர்தார் ஆகியோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai