Enable Javscript for better performance
சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றத்தில் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    அண்ணல் அம்பேத்கர் முத்தமிழ் கலை இலக்கிய நாட்டுப்புறக் கலைஞர்கள், சமூக இளைஞர்கள் நற்பணி சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்சிக்கு வழக்குரைஞர் சசிகுமார் தலைமை வகித்து ஜாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, குண்டு எறிதல் போட்டி, கேரம், சதுரங்கப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai