Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் - Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை புதன்கிழமை தொடங்கியுள்ள நிலையில், வியாழக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கு

    ழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவீட்டு செலவை ஒரு குழந்தைக்கு ரூ. 5-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    2-ஆம் நாளான வியாழக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பக்கிரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் முகம்மது உசேன் உள்பட பலர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இதன் அடுத்தக் கட்டமாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரம் காந்தி சாலை பெரியார் தூண் அருகே சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் நிலைமையை சமாளிக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான குழுவினர்கள் 2-வது நாளாக பள்ளிகளில் சத்துணவுப் பணியை மேற்கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai