Enable Javscript for better performance
சர்க்கரை ஆலை அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சர்க்கரை ஆலை அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டு போராட்டம்

    By உத்தரமேரூர்,  |   Published on : 17th April 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை அடுத்த பழையசீவரம் பகுதியில் உள்ளது பத்மாவதி சர்க்கரை ஆலை. இந்த ஆலையின் அலுவலகம் உத்தரமேரூரில் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலைக்கு உத்தரமேரூரைச் சுற்றியுள்ள திருப்புலிவனம், மருதம், கருவேப்பம்பூண்டி, கம்மாளம்பூண்டி, காரியமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கரும்பு விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் சாகுபடி செய்த கரும்பை அனுப்புகின்றனர்.

    நிர்வாகம் விவசாயிக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,550 வழங்க வேண்டும். ஆனால், சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 6 மாதங்களுக்கு முன் போடப்பட்ட கரும்புக்கு ரூ.500 மட்டும் கொடுத்துவிட்டு மீதித்தொகையைக் கொடுக்காததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த நிலையில், ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உத்தரமேரூரில் உள்ள அலுவலகத்தை பூட்டுப் போட்டு

    முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai