Enable Javscript for better performance
சாலை விபத்தில் பாமக ஒன்றியச் செயலர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் பாமக ஒன்றியச் செயலர் சாவு

    By ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 17th April 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுங்குவார்சத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியச் செயலாளர் விஜயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த சந்தவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் மகன் விஜயன் (38). பாட்டாளி மக்கள் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றியச் செயலாளர். இவர், கடந்த புதன்கிழமை இரவு சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து சந்தவேலூர் நோக்கி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயம் அடைந்த விஜயன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்டச் செயலர் மகேஷ்குமார் உள்ளிட்ட கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த விஜயனின் உடலுக்கு வியாழக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai