Enable Javscript for better performance
சிறுவர்கள் மீது தாக்குதல்: விவசாயி தலைமறைவு- Dinamani

சுடச்சுட

    

    சிறுவர்கள் மீது தாக்குதல்: விவசாயி தலைமறைவு

    By மதுராந்தகம்  |   Published on : 17th April 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செல்போன் திருடியதாக 2 சிறுவர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த விவசாயியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (35). இவருக்கு சொந்தமாக, செய்யூர் தொகுதி, கல்பட்டு கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது, அந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.

    சம்பவத்தன்று, அவரது நிலத்தில் வேர்க்கடலையை அறுவடை செய்யும் பணியில் கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வினோத் (13), அருள் (12) உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    அப்போது கிருஷ்ணமூர்த்தியின் பணம், செல்லிடப்பேசியை காணவில்லை.

    இதனால், சந்தேகம் அடைந்த அவர், 2 சிறுவர்களையும் மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது.

    வீடு திரும்பிய சிறுவர்கள் இருவரும் நடந்த சம்பவத்தை தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    காயமடைந்த சிறுவர்களை செய்யூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் அதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai