Enable Javscript for better performance
செய்தியாளர்களிடம் பேச மறுத்த ஆந்திர ஆளுநர்- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

    திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் வியாழக்கிழமை மாலை வந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட எஸ்.பி. சாம்சன், கோயில் கெüரவ பிரதிநிதி சம்பத் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

    தரிசனம் முடிந்து திரும்பிய ஆளுநரிடம், ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களை வீரப்பன் ஆதரவாளர்கள் என ஆந்திர அரசு மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கை குறித்தும், தமிழகத்தில் உள்ள தெலுங்கர்களை வெளியேற்ற வேண்டும் என வைகோ உள்ளிட்டோர் கூறுவது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர்.

    ஆனால், எந்தக் கேள்விக்கும் ஆளுநர் பதிலளிக்காமல் சென்றார். செய்தியாளர்கள் தொடர்ந்து கேட்டபோது அவரது பாதுகாப்புப் படையினர் செய்தியாளர்களை தள்ளி விட்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் "நோ கமெண்ட்ஸ்' என்று கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

    காஞ்சிபுரம் வருகை: இதேபோல, காஞ்சிபுரத்துக்கு இரு நாள்கள் சுற்றுப் பயணமாக வியாழக்கிழமை இரவு ஆந்திர ஆளுநர் நரசிம்மன் வருகை தந்தார். அவரை ஆட்சியர் வி.கே. சண்முகம் வரவேற்றார்.

    காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களான பாண்டவப் பெருமாள் கோயில், உலகளந்தப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்தார்.

    அவரிடம் செய்தியாளர்கள் ஆந்திர சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். ஆந்திர ஆளுநரான நரசிம்மன் திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai