Enable Javscript for better performance
தனியார் நிறுவன ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் நிறுவன ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 17th April 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் 3-வது நாளாக வியாழக்கிழமை தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 21 தொழிலாளர்களை இந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 21 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று செங்கை பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேஷாத்திரி தெரிவித்திருந்தார்.

    தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது. இதில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதனால் தொழிலாளர்கள் வியாழக்கிழமை 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சமைத்து சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தொழிற்சாலை வளாகத்திலேயே செய்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தமிழக அரசு உடனடியாக தலையிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai