Enable Javscript for better performance
தனியார் பேருந்து விபத்து: 20 பெண்கள் தப்பினர்- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பேருந்து விபத்து: 20 பெண்கள் தப்பினர்

    By காஞ்சிபுரம்,  |   Published on : 17th April 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் அருகே தனியார் நிறுவனப் பேருந்து லேசாக சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 20 பெண்கள் உயிர் தப்பினர்.

    ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காஞ்சிபுரம், உத்தரமேரூர், காவனூர் புதுச்சேரி, மாகறல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண்கள் அதிக அளவில் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் பேருந்து மாகறலை நோக்கி வந்து கொண்டிருந்தது. உத்தரமேரூரைச் சேர்ந்த குணசேகரன் இதனை ஓட்டி வந்தார்.

    புத்தழி என்ற இடத்தில் வளைவில் பேருந்து திரும்பியபோது மழைநீர் தேங்கியிருந்த சாலையோரப் பள்ளத்தில் பேருந்து இறங்கியது. ஓட்டுநரின் சாதுர்யத்தால், பேருந்து கவிழாமல் லேசாக சாய்ந்த நிலையில் நின்றது.

    பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்த திடீர் பிரேக் போட்டதில் அதில் பயணம் செய்த பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அருகில் உள்ள வயலில் வேலை செய்தவர்களும், அவ்வழியே வாகனங்களில் வந்தவர்களும் காயமடைந்தவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மாகறல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai