Enable Javscript for better performance
தூக்கிட்டு இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    பெரியபாளையம் அருகே தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துகோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே ஜெயபுரத்தில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர் தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையைச் சேர்ந்த சுகுமார் மகன் சந்தோஷ்குமார் (25). இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

    இதற்கு தனக்குத் திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் சாந்தோஷ்குமார் கூறியதாகத் தெரிகிறது. ஆனால், அவரது பெற்றோர்களோ திருமணம் செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தான் தங்கியிருந்த அறையில் சந்தோஷ்குமார் புதன்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சென்னை வண்டலூரில் தங்கி வேலை செய்துவரும் அவரது தம்பி தினேஷுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர் பெரியபாளையம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai