Enable Javscript for better performance
பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்குப் பயிற்சி

    By காஞ்சிபுரம்  |   Published on : 17th April 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரிடர் மேலாண்மை காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து புதிதாக உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்கு மறைமலைநகரில் வியாழக்கிழமை பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பில், வட்டாட்சியர்களுக்கான மாநில அளவிலான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமுக்கு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையரும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவருமான டி.எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் முன்னிலை வகித்தார்.

    வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்து பேசியது: நாட்டில் போர் எப்போது வேண்டுமானாலும் வரலாம், வராமலும் போகலாம். ஆனாலும், இந்திய அரசு ராணுவத்துக்கு அதிக நிதியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது. அதேபோல்தான் சூறாவளி, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ, நிலச்சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் வரும், வராமலும் இருக்கும்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது, தமிழக அரசு மிகச் சிறப்பாக மீட்புப் பணியில் செயல்பட்டது. உலக நாடுகள் வியக்கும் வகையிலும், வழிகாட்டியாகவும் தமிழகத்தில் சுனாமித் தாக்குதல் மீட்பு பணி நடைபெற்றது. இதனைக் கருத்தில் கொண்டு பேரிடர் காலங்களில் தயார் நிலையில் எப்போதும் இருப்பதற்காக வருவாய்த் துறையின் கீழ் ஒரு தனி துறையாக பேரிடர் மேலாண்மைத் துறை உருவாக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டங்களில் 32 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு பல்வேறு விதமானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப்பயிற்சி முடித்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்கவேண்டும். எப்போது பேரிடர் வந்தாலும் அந்தக்காலங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுதல் வேண்டும். அதற்காகத்தான் இந்தப்பயிற்சி உங்களுக்கு அளிக்கப்படுகிறது என்றார் அமைச்சர் தங்கமணி.

    இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் எல். ராஜா, சென்னை பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் எஸ்.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பன்னீர்செல்வம் (செங்கல்பட்டு), மருத்துவர் டி.பரிதா பேகம் (தாம்பரம்), பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai