Enable Javscript for better performance
மின்வாரிய ஓய்வூதியர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின்வாரிய ஓய்வூதியர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

    By செங்கல்பட்டு  |   Published on : 17th April 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.

    கடந்த மாதம் உதகையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    கிளைத் தலைவர் எம்.குணசேகரன், செயலாளர் சி.வேம்பு, பொருளாளர் வி.செல்லப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். அனைத்து ஓய்வூதியர்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.செல்வமணி, செங்கல்பட்டு கிளை கே.ஆர்.கணேசன், எம்.மோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    மத்திய அமைப்பின் நிர்வாகிகள் என்.பால்ராஜ், வி.முனிவேல், பொறியாளர் அமைப்பின் எம்.மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai