Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி தீவிரம்

    By காஞ்சிபுரம்,  |   Published on : 17th April 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்த்தல், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியைச் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம், வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது, பெயர் நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16,87,626 ஆண் வாக்காளர்கள், 16,87,037 பெண் வாக்காளர்கள், இதரர் 174 பேர் என மொத்தம் 33,74,837 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களிடம் இருந்து தகவலைத் திருட்டும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களும் ஆர்வமுடன் தங்களது ஆதார் எண்ணை சேர்த்து வருகின்றனர். ஆதார் எண் குறித்த விவரங்களை குறிப்பிட்ட படிவங்களில், வாக்குச்சாவடி அலுவலர்கள் குறித்துச் செல்கின்றனர். இவ்வாறு குறித்துச் செல்லப்படும் தகவல்களை பதிவேற்றம் செய்யும் பணி இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,761 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 12-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மட்டும் 1,82,799 பேர் ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இந்த சிறப்பு முகாம் வரும் 26-ஆம் தேதியும், மே 10, 24-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தனியார் கல்லூரிகள், நகராட்சி அலுவலகங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai