Enable Javscript for better performance
எழுச்சியுடன் நடந்த குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேசியக் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    காஞ்சிபுரத்தில்..

    காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், கொடிகாத்த குமரனுடன் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகி துளசிங்கப் பெருமாள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    முன்னாள் மாவட்ட கருவூல அலுவலர் பாலசுப்பிரமணியன், தமிழ்ச் சங்கச் செயலர் ஜனாதட்சன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராஜாபாதர், கெüரவத் தலைவர் நாகூஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மண்டலப் பொதுமேலாளர் ந. நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போக்குவரத்துக் கழகப் பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

    காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆணையர் சர்தார், பொறியாளர் சுப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் வெள்ளைகுளம் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு, காந்தி தொண்டர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். தேசியக் கொடியை நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு ஏற்றி வைத்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் வி. பன்னீர்செல்வம், 12-வது வார்டு உறுப்பினர் எஸ். பன்னீர்செல்வம், நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் சம்பந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதே போல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றிலும் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

    உத்தரமேரூரில்..

    உத்தரமேரூர் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சங்கச் செயலர் ஆர்.நீலகண்டன் தேசியக் கொடியேற்றினார். சங்கத் தலைவர் கே.சங்கரன், பொருளாளர் ஆறுமுகம், டி.கே.கோபாலகிருஷ்ணன் மருத்துவர்கள் பரமசிவம், ஆனந்த், அரசு வழக்குரைஞர் மணி, வெ.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் அ.ரவிசங்கர் தேசியக் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத், துணைத் தலைவர் சுஜாதா பூபாலன், ஏ.ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சாலவாக்கத்தில் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநிலத் தலைவர் எம்.உசேன் தேசியக் கொடி ஏற்றிவைத்தார்.

    ஸ்ரீபெரும்புதூரில்...

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கடேசன் அலுவலவக வளாக்ததில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, தேசியக் கொடியேற்றிவைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரான்ஸிஸ் மைக்கேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வெங்கடேசன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.தினகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கருமாங்கழனி ராமு, குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மேட்டுப்பாளையம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியர் சோபிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் வேலு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அருந்ததி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    குன்றத்தூரில்...

    குன்றத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுந்தர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தர், வனக் குழுத் தலைவர் சுபாஷ், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் துளசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மதுராந்தகத்தில்...

    மதுராந்தகம் சௌபாக்மல் சௌகார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமை ஆசிரியர் மல்லிகா ஜாஸ்மின் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.டி. உக்கம்சந்த் தேசியக் கொடியேற்றிவைத்து, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.

    உதவித் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எஸ்.டி.அசோக்குமார், அமுல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மதுராந்தகம் கிளை நூலகத்தில், கிளை நூலகர் கோ.விநாயகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். புரவலர்கள் பேராசிரியர் ஸ்ரீதர், சென்னை வானொலி நிலைய ஓய்வு பெற்ற அதிகாரி சீனிவாசன், நூலக வாசகர் வட்டத் தலைவர் வேதாசலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பையம்பாடி சந்தோஷி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசியக் கொடியை கல்லூரி முதல்வர் சண்முகம் ஏற்றினார்.

    சுபம் கல்வியியல் கல்லூரி, சுபம் வித்யாலயா பள்ளிகளில் நடைபெற்ற விழாவில், அரசு வழக்குரைஞர் வி.அகோரம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

    கல்லூரித் தாளாளர் எஸ்.டி.மனோகர்குமார், கல்லூரி முதல்வர் பத்திரி, சுபம் வித்யாலயா பள்ளி முதல்வர் சிவசங்கரன் , கல்லூரி நிர்வாகிகள் அபய்குமார், பவன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பாதிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அல்லிமுத்து தேசியக் கொடியேற்றிவைத்தார். தலைமையாசிரியர் என்.மாதவன், ஆசிரியர்கள் விஜயலட்சுமி, முனுசாமி, தீனதயாளன், சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    செங்கல்பட்டில்..

    செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தீயணைப்புப் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். வட்டாட்சியர் பஷீரா, கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லூரியிலும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மோகன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கண்காணிப்பாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் அன்புச்செல்வன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாரத ஸ்டேட் வங்கியில் கிளையின் முதன்மை மேலாளர் தட்சிணாமூர்த்தியும், ரெப்கோ வங்கியில் வங்கி மேலாளர் கெüதமனும் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தனர்.

    செங்கல்பட்டு எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ அனகை முருகேசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

    மாமல்லபுரத்தில்...

    மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.கோதண்டபாணி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். செயல் அலுவலர் என்.எம்.முருகன், துணைத் தலைவர் பொ.தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கல்லூரியின் தலைமைச் செயல் இயக்குநர் ஆர்.விஜயராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் பொன்ராஜ், இயக்குநர் சீனிவாசன், மக்கள் தொடர்பு அலுவலர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    திருப்போரூரில்..

    திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்தில், எம்எல்ஏ தண்டரை மனோகரனும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயகோமதி ரகுவும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai