Enable Javscript for better performance
குடியரசு தின விழாவில் ரூ.3.65 லட்சம் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தின விழாவில் ரூ.3.65 லட்சம் நலத் திட்ட உதவிகள்

    By காஞ்சிபுரம்  |   Published on : 27th January 2015 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியரசு தின விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.3.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் வழங்கினார்.

    விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.

    இதைத் தொடர்ந்து, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலத் திட்டம் ஆகிய அணிகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து ஆட்சியர் கெüரவித்தார்.

    மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 41 தலைமைக் காவலர்களுக்கு 2015ஆம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களையும் அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து, அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்களுக்கான நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.

    இதன்பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.4,890 மதிப்பில் காதொலிக் கருவி, சோலார் பேட்டரிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பாக 22 பயனாளிகளுக்கு ரூ.76,450 மதிப்பில் தையல் இயந்திரங்கள், வேளாண்மைத் துறை சார்பாக 4 பயனாளிகளுக்கு ரூ.1,399 மதிப்பில் விவசாய இடு பொருள்கள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.1.08 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 7 பயனாளிகளுக்கு ரூ. 87,500 மதிப்பில் ஈமச்சடங்கு உதவித்தொகை, 6 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பில் நலிந்தோர் நிவாரணத் தொகை, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.7,000 மதிப்பில் ஊக்கத் தொகை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மூலமாக 4 பயனாளிகளுக்கு ரூ. 20,000 மதிப்பில் சிறந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கானப் பரிசுத்தொகை என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.3,65,239 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி, பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிழக்கு தாம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம் செயிண்ட் தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சம்பத்குமார், உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜீ ஜார்ஜ், ஆதிகணேஷ் (பயிற்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் திட்ட இயக்குநர் க.முத்துமீனாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கராஜூ, கோட்டாட்சியர்கள் சிவருத்ரய்யா (காஞ்சிபுரம்), பரிதா பானு (தாம்பரம்), எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா. கணேசன், மொளச்சூர் இரா. பெருமாள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai