Enable Javscript for better performance
ஊராட்சி மன்ற தலைவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டம், வழிகாட்டி பெண்கள் சங்கத்தின் சார்பில், ஊராட்சி மன்றத் தலைவிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் செங்கல்பட்டு பழவேலியில் உள்ள வழிகாட்டிப் பெண்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    20 ஊராட்சிகளில் இருந்தும் பெண்கள், தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில், இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவது, கிராமங்களில் வளம்பெறச் செய்யும் ஏரி, குளம், குட்டை, மழை நீர்

    வரத்து கால்வாய் பாதுகாப்பது குறித்தும், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கலப்படப் பொருள்கள் வருவதைக் கண்காணித்துத் தடுக்கவும் ஆய்வு மேற்கொள்ளவும் வேண்டும்.

    வீட்டுத் தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறிப் பயிரிடவும், இயற்கை விவசாயத்துக்கு முதலீடும், மானியத்தில் விதைகள் வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு, முன்னதாக வழிகாட்டி சங்க நிர்வாகி கன்னிகா தலைமை தாங்கினார்.

    அமைப்பின் இயக்குநர் ஆர்.வசந்தா முன்னிலை வகித்துப் பேசினார். மேனகா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai