Enable Javscript for better performance
கருமாரியம்மன் கோயிலில் 32 அடி உயர சூலத்துக்கு கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கருமாரியம்மன் கோயிலில் 32 அடி உயர சூலத்துக்கு கும்பாபிஷேகம்

    By செங்கல்பட்டு  |   Published on : 28th January 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு, ஜன. 27: செங்கல்பட்டு திருவடிசூலத்தை அடுத்த ஸ்ரீ கோயில்புரத்தில உள்ள 51 அடி உயர தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் கல்லினால் ஆன 32 அடி உயர பிரம்மாண்ட சூலத்துக்கான கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், திருவடிசூலம் ஸ்ரீ கோயில்புரத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள 51 அடி உயர பிரம்மாண்ட நாயகியாக வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் நவகிரகங்கள், 27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய 32 அடி உயரத்தில் கல்லினால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட சூலம், சிம்ம வாகனம், பலிபீடம் தனித்தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கான கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் கோயில் ஸ்தாபகர் மதுரைமுத்து தலைமையில் நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்கங்க கிரஹனம், யாகபூஜை, நவகிரக ஹோமம், கோபூஜை, மஹா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் கலசப் புறப்பாடு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கு, காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், திருப்போரூர் எம்.எல்.ஏ. தண்டரை கே.மனோகரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன், திருவடிசூலம் ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சுனன், துணைத் தலைவர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அண்டை மாநிலங்களிலிருந்தும், சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்தும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai