Enable Javscript for better performance
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம்,  ஜன. 27: மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ்.சி. அணி சார்பில் காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட எஸ்.சி. அணித் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

    இந்தத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைக்கக் கூடாது. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் மண் அள்ளும் பாத்திரம் சகிதமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் பன்னீர்செல்வம், சக்ரபாணி ரெட்டியார், மாவட்டத்  தலைவர் (பொறுப்பு) சிவராமன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம், எஸ்.சி. அணி வடக்கு மாவட்டத் தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai