Enable Javscript for better performance
கார்கில் போர் வீரர் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    கார்கில் போர் வீரர் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி

    By செங்கல்பட்டு  |   Published on : 28th January 2015 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு,  ஜன. 27: போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு, காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கார்கில் நினைவுச் சின்னம் அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்தியா - பாகிஸ்தான் போரில் தாய் நாட்டைக் காக்க இன்னுயிரை தந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களுக்கான நினைவுச் சின்னம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்த அந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கோட்டாட்சியர் ஆர்.பன்னீர் செல்வம், வட்டாட்சியர் பஷீரா, நகர்மன்றத் தலைவர்  கே.அன்புச்செல்வன், செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான எம்.பி.வெங்கட பெருமாள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    நகர வளர்ச்சி மன்றத்தின் நிர்வாகிகள் ராஜி, ஸ்ரீபாதராஜ், முரளிமோகன், ஏ.ஜி.டி.துரைராஜ், மாசிலாமணி உள்ளிட்ட நகரில் உள்ள சமூக நல அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தி கெளரவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai