Enable Javscript for better performance
கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உத்தரமேரூர், ஜன. 27:  உத்தரமேரூர் வட்டம்  அனுமந்தண்டலம் ஊராட்சியில் திங்கள்கிழமை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் கிராம சபைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். துணைத்  தலைவர் பஞ்சரத்தினம் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர்கள் ஆறுமுகம், டி.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அக்டோபர் 2014 முதல் டிசம்பர் 2014 முடிய ஊராட்சி நிதிகள், ஊராட்சிச் செலவீனங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. புதிய உயர் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்தல், பவர் பம்புகள், சோலார் தெரு விளக்குகள் அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களைத் தூய்மைப்படுத்துதல், பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தை முற்றிலும் தவிர்த்தல், கழிவுநீர் தேங்காமல் கிராமப்புறத்தை தூய்மையாகப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மூத்த நிர்வாகி ராமலிங்கம்  செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai