Enable Javscript for better performance
தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    By ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 28th January 2015 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெரும்புதூர், ஜன. 27:  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பிச்சிவாக்கம், கப்பாங்கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் நடைபெற்றது.

    மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் தொடக்கியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த பிச்சிவாக்கம், கப்பாங்கோட்டூர், கோட்டார், சிவபுரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அண்மையில் நடைபெற்றது.

    முகாமுக்கு, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சேர்க்கைப் பொறுப்பாளர் வேலு தலைமை தாங்கினார்.

    இதில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    கட்சியில் இணைந்தவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.டி.நெடுஞ்செழியன் பொன்னாடை அணிவித்து உறுப்பினர் சேர்க்கை அடையாள அட்டையை வழங்கினார்.

    இதில் வல்லக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அன்பு, கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அரிகிருஷ்ணன், பென்னலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கர்ணன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai