Enable Javscript for better performance
பிப்ரவரி 1-இல் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    பிப்ரவரி 1-இல் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

    By செங்கல்பட்டு  |   Published on : 28th January 2015 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டு, ஜன. 27: திருக்குழுகுன்றம் உருத்திரகோடி "பட்சித் தீர்த்தம்" என்றழைக்கப்படும் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த கும்பாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை வாஸ்து சாந்தி, மிருகசங் கிரஹனம், பிரவேச பலி, ராஷோகத்ன ஹோமம், அங்குரார்ப்பணமும் நடைபெறுகிறது.

    வியாழக்கிழமை காலை நவகிரஹ ஹோமம், யாக அலங்காரம், ஆசாரிய வரணமும் மாலை ரக்ஷôபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷனம், அதிவாச யாகபூஜை, பூர்ணாஹூதி நடைபெறும்.

    ஞாயிற்றுக்கிழமை காலை மஹா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கலசப் புறப்பாடு நடைபெற்று மீன லக்னத்தில் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ வேதகிரீஸ்வரர் சுவாமி பரிவார சகிதம் மஹா கும்பாபிஷகம், மஹா அபிஷேகம் காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது.

    இரவு திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகளின் வீதிப் புறப்பாடும் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.ஆர்.எஸ்.விஜய சிவாச்சாரியார், டி.சி.ஏ.வேதமூர்த்தி சிவாச்சாரியார், திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், ஆய்வாளர் இரா.அலமேலு, தக்கார், செயல் அலுவலர் இரா.கேசவராஜன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai