உத்தரமேரூர் வட்டம், நோணாம்பூண்டி கிராமத்திலுள்ள ஸ்ரீநின்றகோடி நீர்வாழியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆலயம் புனரமைக்கப்பட்டு, கடந்த மாதம் ஜனவரி 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மகா குடமுழுக்கு விழா நடைப்பெற்றது.
இதைத் தொடர்ந்து 48 நாள்களும் மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மண்டல பூர்த்தி தினமான நேற்று வியாழக்கிழமையன்று உற்சவ மூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் நோணாம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.