Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

    அதிமுக சார்பில்...

    அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை வகித்தார். தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் ஜீவானந்தம், நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.டி.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    திமுக சார்பில்...

    திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அக் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் சுந்தர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.பொன்மொழி, நகரச் செயலர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    காங்கிரஸ் சார்பில்...

    காங்கிரஸ் சார்பில் ஆர்.வி.குப்பன் தலைமையில் அக் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட எஸ்.சி-எஸ்.டி பிரிவுத் தலைவர் அளவூர் நாகராஜன், மூத்த காங்கிரஸ் தலைவர் வி.பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மக்கள் நலக் கூட்டணி சார்பில்...

    மக்கள் நலக் கூட்டணி சார்பில், மாவட்ட மதிமுக செயலர் வளையாபதி தலைமையில் விடுதைலச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்டத் துணைச் செயலர் திருமாதாசன், நகர தேமுதிக முன்னாள் செயலர் ஏகாம்பரம் உள்பட பலர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதே போல் திராவிடர் கழகம், இந்திய குடியரசுத் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூரில்...

    ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் அத் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனி, குன்றத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர் மொளச்சூர் ரா.பெருமாள், குன்றத்தூர் நகரச் செயலாளர் அலெக்சாண்டர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உத்தரமேரூரில்...

    உத்தரமேரூரில் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்ட விழாவில், சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர், ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உத்தரமேரூரில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த விழாவில், இந்திய குடியரசு கட்சியினர் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பெரியார் சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம், பஜார் வீதி வழியாக வந்து நிறைவடைந்தது. தொடர்ந்து அம்பேத்கர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் இந்திய குடியரசு கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் என்.சம்பத், மாவட்ட இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டில்...

    செங்கல்பட்டில் அம்பேத்கரின் 126-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு கட்சியினர் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திமுக சார்பில் நகரச் செயலாளர் நரேந்திரன் தலைமையில், நகர்மன்றத் தலைவர் அன்புச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ்கண்ணன், வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதிமுக சார்பில் தொகுதி வேட்பாளர் கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சம்பத்குமார், நகரச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் மலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    அதேபோல எஸ்சி-எஸ்டி நலச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    மாமல்லபுரத்தில்...

    மாமல்லபுரம் அதிமுக வேட்பாளர் எம்.கோதண்டபாணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வீ.கிட்டு உள்ளிட்டோர் அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவிட்டு மரியாதை செலுத்தினர்.

    திருப்போரூரில் சட்டப் பேரவை உறுப்பினர் தண்டரை கே.மனோகரன் தலைமையில் அதிமுகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருவள்ளூரில்...

    திருவள்ளூரில் அம்பேத்கரின் 126-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதிமுக சார்பில் திருவள்ளூர் பேருந்து நிலையம், ஆயில்மில் பகுதிகளில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் கமாண்டோ ஏ. பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள், ராதாகிருஷ்ணன், எழில், லோகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல அணி ஜெ.சங்கர் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஆவடி நாசர், திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, திராவிட பக்தன், ஆதிசேஷன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பாஜக சார்பில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் ஆர்எம்ஆர்.ஜானகிராமன் மாலை அணிவித்தார். துரைப்பாண்டியன், சுகதேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன், தளபதி சுந்தர், புரட்சி பாரதம் சார்பில் இளைஞரணித் தலைவர் மணவூர் மகா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    கும்மிடிப்பூண்டியில்...

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த குமரன்நாயக்கன் பேட்டையில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சதுரங்கம், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கட்டுரை, ஓவியப்போட்டிகள், மாரத்தான் ஓட்டம், உரி அடித்தல் போன்றவை நடத்தப்பட்டன.

    தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஈகுவார்பாளையம் ஊராட்சித் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமை வகித்தார். தொடர்ந்து போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழ்முதலம்பேட்டில்...

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கீழ்முதலம்பேடு பகுதியில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட ரத்த தான முகாமுக்கு ஊராட்சித் தலைவர் இந்திரா திருமலை தலைமை வகித்தார். முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டேவிஸ் செந்தில்குமார், கீழ்முதலம்பேடு ஊராட்சிச் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முகாமில் சென்னை ரோட்டரி சங்க ரத்த வங்கியில் இருந்து மருத்துவர் வெங்கடேஷ் தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர் முகாமை நடத்தினர். முகாமில் 60 பேர் ரத்தம் வழங்கினர்.

    செங்குன்றத்தில்...

    செங்குன்றத்தை அடுத்த காவாங்கரை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

    நிகழ்ச்சிக்கு டாக்டர் அம்பேத்கர் இரவு பாட சாலை முருகானந்தம் தலைமை வகித்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் தர்மராஜ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெரியாரன்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai