Enable Javscript for better performance
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா

    By  மதுராந்தகம்,  |   Published on : 15th April 2016 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் துர்முகி தமிழ்ப் புத்தாண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
     விழாவை முன்னிட்டு சித்த மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து கலச விளக்கு, வேள்வி பூஜை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     மறுநாள் அதிகாலை 3 மணிக்கு கருவறை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
     காலை 7.45-க்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை இயக்கத் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் மரக்கன்றுகளையும், மூலிகைச் செடிகளையும் வழங்கினார்.
     தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பங்காரு அடிகளார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கினார்.
     இந் நிகழ்ச்சியில் சித்தர் பீட ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்கத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai